அண்ணா பதக்கம் விருதுக்கு வரும் 9 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2022-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று உயிர், உடமை போன்றவற்றைக் காப்பாற்றுவதில் துணிச்சலான செயல் புரிந்தமைக்கான வீரத்திற்கான அண்ணா பதக்கம் முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இவ்விருதானது தீயணைப்பு துறையினர், காவல் துறையினர், பொதுமக்கள் மற்றும் ஆயுதபடையினர் பல்வேறு நிகழ்வுளான இயற்கை பேரழிவுகள், விபத்து, நீரில் முழ்கியவரை காப்பாற்றுதல் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுத்தவர்கள், வீர,தீர செயல் புரிந்தமைக்காக அண்ணா பதக்கம் வழங்கப்படவுள்ளது.
இவ்விருதிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் பரிந்துரைகளை நியாயப்படுத்தும் ஒரு விரிவான அறிக்கை பரிந்துரைக்கப்பட்ட விவரங்களுடன் இணைக்கப்பட வேண்டும்.மேற்காணும் விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விபரங்கள் பொதுத்துறை (பொது1), தலைமைச்செயலகம், சென்னை-600009 என்ற முகவரியிலும் அல்லது http://awards.tn.gov.in/ என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2022 ஆம் ஆண்டிற்க்கான அண்ணா பதக்கம் விருதிற்கு தகுதியான நபர்களிமிருந்து பெறப்படும் விண்ணப்பம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் பரிந்துரை பெற்று சென்னைக்கு 10.12.2021 அன்று மாலைக்குள் அனுப்பபடவுள்ளதால் மேற்காணும் விருதிற்க்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், SDAT மாவட்ட விளையாட்டரங்கம் தூத்துக்குடி-1 என்ற முகவரியில் நேரில் 09.12.2021 அன்று மாலைக்குள் சமர்ப்பித்திட கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 0461-2321149 / 7401703508 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்று கொள்ளலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.


