தூத்துக்குடி இந்திராநகரைச் சேர்ந்தவர் ரேசாரி மகன் சேவியர் டென்சிங் இவர் இன்று விடுமுறை தினம் என்பதால் தனது நண்பர்களுடன் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே கலியாவூரில் உள்ள மருதூர் அணைக்கட்டு பகுதியில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


