சேர்வைக்காரன்மடத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமை தூத்துக்குடி மாவட்ட மண்டல இணை இயக்குநர் விஜயகுமார் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். முகாமில் சிறந்த கன்று வளர்ப்பாளர்களில் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், மேலும் மூன்று நபர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினார்.
இம்முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் ஆனந்தராஜ், செல்வராணி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் வள்ளி நாயகம் கலந்து கொண்டு, கலந்து கொண்ட கால்நடைகளுக்கு பல்வேறு மருத்துவ மற்றும் ஆலோசனைச் சேவைகள் வழங்கினர்.
இம்முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல், சினை பரிசோதனை செய்தல், மலடு நீக்க சிகிச்சை அளித்தல், தாது உப்பு கலவை வழங்குதல், கோமாரி நோய் மற்றும் கோழி கழிச்சல் தடுப்பூசி செலுத்துதல்,
நாய்களுக்கு சிறப்பாக சாக்பீஸ் (Rabies) தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேலும், தீவனப் பயிர் மற்றும் தீவனப்புல் சாகுபடி விளக்கம், சிறு அறுவை சிகிச்சை மற்றும் சிறு கண்காட்சி நடைபெற்றது. முகாமில் கால்நடை மருத்துவ கல்லூரி தொழில்நுட்ப வல்லுனர்கள் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கினர்.
கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த அருண் பிரகாஷ், ஊராட்சி செயலர் மாரியம்மாள், முன்னாள் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா, சேர்வைக்காரன்மடம் தர்மகர்த்தா ராஜபாண்டி, மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் முனைப்புடன் பங்கு பெற்றனர். கால்நடை வளர்ப்போர் பெருமளவில் பங்கேற்று, முகாமின் மூலம் முழுமையாக பயன்பெற்றனர்


