முதலில் சித்திர எழுத்துக்களால் மனிதன் எழுத துவங்கினான்.பின் கருத்து எழுத்துக்கள் உருவானது.அதன்பின் கீறல் குறியீடுகளால் எழுத்துக்கள் உண்டானது.பின் தமிழ் பிராமி எழுத்துக்கள் உண்டானது.இது சிந்து சமவெளி நாகரீகத்துடன் ஒத்துப் போனது.இதன்மூலம் சிந்து சமவெளி நாகரீகம் தமிழர் நாகரீகம் தான் என ஒப்பிட முடிந்தது.பிராமி எழுத்துக்களில் கரோஷ்டி என்ற எழுத்து முறை பஞ்சாப் அருகில் கண்டறியப் பட்டது.கழுதை காது போன்று இருந்த இந்த எழுத்து இந்தியாவின் எல்லா இடத்திலும் வழக்கத்தில் இருந்தன.தமிழகத்தில் ஏராளமான பிராமி எழுத்துக்கள் சமண சான்றுகளுடன் கிடைத்தன.இலங்கையில் புத்தருடன் தொடர்புடைய ஏராளமான பிராமி எழுத்துக்கள் இன்றும் உள்ளன.கிமு 300 அசோகர் காலத்து கல்வெட்டு மாங்குடி என்ற கிராமத்தில் கண்டறியப்பட்டது.நெல்லை மாவட்டத்தில் கீழவளவு என்ற கிராமத்தில் 1903ல் கல்கத்தாவில் பணிபுரிந்த ஜேம்ஸ்பிரின்செப் என்பவர் முதன் முதலில்பிராமி எழுத்துக்களை கண்டறிந்தார்.மறுகால் தலையில் 1906ல் அகழ்வாய்வு பணி துவங்கியது.கி மு 1 ம் நூற்றாண்டை சேர்ந்த சமணநூல்(சமவயங்க சுத்த)18வகை எழுத்து முறைகள் நடைமுறையில் இருந்ததாக கூறுகிறது.அதில் ஒன்றுதமிழ் பிராமி.இதில்தான் தாமிரபரணியைப்பற்றிய எழுத்து இருந்தது.லலித விஸ்தாரம் என்ற சமண பவுத்த நூலில் (கிபி 5-6)64வகை எழுத்துக்கள் பற்றி சொல்லப் படுகிறது.இதில் தமிழை குறிக்கும் எழுத்துக்கள் திராவிடி எனப்படும்.நடுகல்லுக்கு பின்தான் கோவில்களில் எழுத்துக்கள் தோன்றின.கொற்கை அகழ்வாய்வு அன்றய தமிழனின் நாகரீக வாழ்க்கை முறைகளை அறிய உதவின.ஆதித்த நல்லூரிலும் இந்த பழைமையான நாகரீக முறை வெளிப்படுத்தப் பட்டது.
அன்றய தமிழ் எழுத்துக்களில் பனை மரங்கள் தாளம்-எனவும் பனை ஓலை சுவடி தாள பத்திரம் எனவும் பெயர் பெற்றிருந்தது.இந்த பனை மரம் தாள கேது விருட்சம் என்ற சிறப்பு பெயர் பெற்றிருந்தது.தாமிரபரணிக் கரையில் பண்டைய எழுத்துக்கள் ஏராளமாக உள்ளன.இதுவே தமிழனின் நாகரீகத்தை உலகிற்கே பறை சாற்றுகின்றன.ஆய்வு செய்தால் தாமிரபரணியின் கரையில் ஆதி தமிழனின் வாழ்வியல் இங்கு ஆரம்பமானதை உணரலாம்.மேலும் ஆதி கால குட்டி குட்டி விபரங்களை அறிய முயல்வோம்.


