தூத்துக்குடி மாவட்டத்தில் நீண்டகாலமாக பள்ளி செல்லா மாணவர்களை பள்ளியில் சேர்த்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் நீண்டகாலமாக பள்ளி செல்லா மாணவர்களை மீளவும் பள்ளியில் சேர்த்தல் தொடர்பாக மாவட்டக்குழு உறுப்பினர்களுக்கானக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் இன்று நடைபெற்றது.
மாநிலத்திட்ட இயக்குநர் (ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சென்னை அவர்களின் செயல்முறைக்கடிகத்திற்கிணங்கவும் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணைக்கிணங்கவும், 15 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவும், 2023-24 ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களைக் 01.08.2023 முதல் கணக்கெடுப்புப் பணியினை மேற்கொண்டு கைப்பேசி செயலியில் பதிவு செய்தல்,
இடைநின்ற மாணவர்களை மீளவும் சேர்க்கை செய்வதற்கான ஆலோசனைகளை பிறதுறை அலுவலர்களடங்கிய மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் கூட்டத்தில் ஆலோசனை பெற்று பின்பற்றுதல், அதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில், பிறதுறை அலுவலர்களுடன் இணைந்து இடை நின்ற மாணவர்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு வழங்கி மீளவும் பள்ளியில் சேர்க்கை செய்ய திட்டமிடுதல் மற்றும் சிறப்புக் கவனம் தேவைப்படும் குடியிருப்புகளில் பிற துறை அலுவலர்களுடன் இணைந்து கூட்டு ஆய்வு செய்ய திட்டமிடுதல் ஆகும்.
மாணவர்களின் வருகையை ஆசிரியர்கள், கைப்பேசி செயலியில் பதிவு செய்து வருகிறார்கள். அவற்றில் 28.07.2023 முதல் 26.08.2023 வரை 15 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களைக் கண்டறிந்து, ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுநர்களும், மாணவர்களை மீளவும் பள்ளியில் சேர்க்கை செய்யவும், வருகை புரியாமைக்கான காரணத்தை வெப்சைட்டில் அப்டேட் செய்தும் வருகிறார்கள்.
இப்பட்டியல் ஒவ்வொரு பள்ளியின் ஐ.டியில் காண்பிக்கும். அவ்வாறு பெறப்பட்ட அறிக்கையில் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் 927 மாணவர்கள் பற்றிய தற்போதைய நிலையை நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டபொழுது மீளவும் பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் 80 பேர், உடல்நிலை சரியில்லாமல் / உறவினர் வீட்டிற்கு சென்றோர் / திருவிழாவிற்கு சென்று மீளவும் பள்ளிக்கு வரவாய்ப்புள்ளோர் 202 பேர் பிறதுறையில் பயில்வோர் 5 பேர் மாற்றுத்திறன் மற்றும் இருமுறை பதிவு 5 பேர் புலம்பெயர்ந்தோர் 127 பேர் ஆக மொத்தம் 499 பேர் போக மீதமுள்ள 428 வேலைக்கு செல்லவும், வீட்டில் இருக்கவும் உள்ளனர்.
428 பேர் மீண்டும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலமாக 05.09.2023 அன்று மீண்டும் ஆய்வு செய்தபோது பள்ளியில் சேர்ந்தோர் 23பேர் பிறதுறையில் பயில்வோர் 9 பேர், புலம்பெயர்ந்தோர் 23பேர் 2 மாணவிகள் திருமணம் செய்தோர் மொத்தம் 57 பேர் போக மீதமுள்ள 371 மாணவர்கள் வேலைக்கும் வீட்டில் இருப்போர்களாக பள்ளிக்கு செல்லாமல் இருக்கிறார்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் 3 மாதங்களுக்கு மேல் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்கள் பள்ளியில் அனுப்பப்பட்ட 7544 மாணவர்களில் தற்போது 05.09.2023 வரை ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுஞர்களும் கணக்கெடுப்பு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 556 மாணவர்கள் மீதமுள்ள 1978 மாணவர்கள் இந்த மாதம் முழுவதும் கண்டறியப்படவுள்ளனர் கணக்கெடுப்புப்பணி முடிந்ததும் பள்ளியில் சேர்க்கை செய்யப்படுவர். இவற்றில் 3 பிரிவுகள் உள்ளனர்.
கணக்கெடுப்புப்பணி முடிந்த பிறகு பள்ளியின் சேர்க்கை செய்யப்படாத மாணவர்களை, வட்டார அளவிலான குழு ஒருங்கிணைப்பாளர்களாகிய வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாகவும், வட்டாரக் கண்காணிப்பு அலுவலர்கள் மூலமாகவும் பள்ளிகளில் மீளவும் பள்ளிகளில் சேர்க்கை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
அதற்கு, மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்களாகிய பிறதுறை அலுவலர்களாகிய முதல்நிலை அலுவலர்கள் வட்டார அளவிலான தங்கள் துறை சார்ந்த பணியாளர்கள் பள்ளி அளவில் இணைத்து பணியாற்றிட தசுவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், தெரிவித்தார். கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


