தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மாப்பிள்ளையூரணியில் வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா வழிகாட்டுதலின்படி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் க.க. நிவேதிதா சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், வளரிளம் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொந்தரவுகளைத் தடுக்கும் முறைகள், இணையவழி துன்புறுத்தல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள், குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதைக் தடுப்பதற்கான சட்டப் பிரிவுகள் குறித்து விரிவாகக் எடுத்துரைத்தார்.
மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு வழக்கறிஞர் ராம்ஜிபதி கலந்துகொண்டு, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் அதற்கு எதிரான சட்டப் பாதுகாப்பு உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, குழந்தைத் திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி கூட்டத்தில் பங்கேற்ற அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் நிதி கல்வியறிவு வல்லுநர் ஜெயலட்சுமி, பாலின நிபுணர் முருகப்பெருமாள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


