தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் ரத்த தானம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட இரத்ததான கழகம் சமூக சேவகர் ச. பாலா என்ற பாலசந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள இரத்த தானம் செய்யும் வங்கியில் 24 மணி நேரமும் வழங்க வழி வகை செய்ய ஏற்பாடு செய்தால் இதன் மூலம் இரத்த தானம் செய்யும் கொடையாளர்கள் ஆர்வத்துடன் வந்து இரத்த தானம் செய்ய எளிதாக இருக்கும்.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே நேரம் ஒதுக்கி உள்ளதால் இரவு நேரங்களில் பொது மக்கள் மற்றும் நோயாளிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். உயிர் காக்கும் உன்னத சேவையான இரத்த தான சேவையை 24 மணி நேரமும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


