சாத்தான்குளம் வட்டத்தில் 9 கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் வருவாய்க் கோட்டம் அளவிலான கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கலந்தாய்வு திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்றது.
இதில், மீரான்குளம் 1 கிராம நிர்வாக அலுவலராக இசக்கிராஜ், மீரான்குளம் 2 – விஸ்வநாதன், கருங்கடல் – வேல்முருகன், எழுவரைமுக்கி- சுந்தரபாண்டி, பிடானேரி – சத்யராஜ், பன்னம்பாறை – பால்குமார், சாத்தான்குளம் கஸ்பா-மதுமதி, முதலூர் – செந்தில்முருகன், அரசூர் 1 கிராம நிர்வாக அலுவலராக சுபாஷ் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு, பதவியேற்றனர்.


