தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் மூன்றடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.


