இன்று புனித வெள்ளியில், கர்த்தராகிய கிறிஸ்து ஆசீர்வதிக்கப்பட்ட தியாக உணர்வை நினைவு கூர்கிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஏசு மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்து மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. புனித வெள்ளி, பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்பது ஏசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் இறந்து, மீண்டும் உயிர்த்தெழுந்ததையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படும் நிகழ்வாகும்.
புனித வெள்ளியை முன்னிட்டு இந்தநிலையில் பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில், இன்று புனித வெள்ளியில், கர்த்தராகிய கிறிஸ்து ஆசீர்வதிக்கப்பட்ட தியாக உணர்வை நினைவு கூர்கிறோம். அவர் வலியையும் துன்பத்தையும் தாங்கினார், ஆனால் சேவை மற்றும் இரக்கத்தின் இலட்சியங்களிலிருந்து ஒருபோதும் விலகவில்லை. கர்த்தராகிய கிறிஸ்துவின் எண்ணங்கள் மக்களை ஊக்கப்படுத்தும் என பதிவிட்டுள்ளார்.


