ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்த்தராஜ் ஏற்பாட்டில் ஊர்வசி இலவச அகாடமி ஸ்ரீவைகுண்டம் மேல சன்னதி தெருவில் திறக்கப்பட வுள்ளது. இந்த அகடாமியில் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு இலவசமாக வேலைவாய்ப்பு தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தொகுதியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் சாத்தான்குளம் பகுதியில் இந்த அகாடமியை திறக்க ஊர்வசி அமிர்தராஜ் திட்ட மிட்டுள்ளார். இதன் படி தனது தொகுதியில் உள்ள ஏராளமானவர்கள் மத்திய மாநில அரசு போட்டி தேர்வில் இலவசமாக பயிற்சி பெற்று அரசு வேலையை பெறலாம்.
இந்த அகடாமி திறப்பு விழா வருகிற 10 ந்தேதி ஞாயிற்றுகிழமை 3 மணிககு நடைபெறுகிறது. மீன்வளம்,மீனவர் நலன்மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு அகாடமியை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைக்கிறார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு. கி. செந்தில்ராஜ் வாழ்த்துரை வழங்கிறார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்த்ராஜ் வரவேற்கிறார். மாவட்ட கண்காணிப்பாளர் லோக பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், ஊர்வசி அகாடமி அட்வைசர் மகாலிங்கம், டி.வி.எஸ் அறக்கட்டளை கள இயக்குனர் விஜயகுமார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஊர்வசி அகாடமி ஒருங்கிணைப்பாளர் ராஜ் திலக் மாணவர்களுக்கு ஊக்க உரையாற்றுகிறார்கள். சங்கர் நன்றியுரையாற்றுகிறார்.


