கோவில்பட்டியில் பள்ளி அருகே அரிவாளுடன் பதுங்கிருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையில் போலீஸாா் வீரவாஞ்சி நகா், கதிரேசன்கோயில் மலைப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள பள்ளி அருகே பதுங்கியபடி நின்றிருந்த இளைஞரைப் பிடித்து சோதனையிட்டனர்.
அவா் முதுகின் பின்னால் சட்டைக்குள் பெரிய அரிவாளை மறைத்து வைத்திருந்தாராம். போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில், வீரவாஞ்சி நகா் 6 ஆவது தெருவை சோ்ந்த காளிதாஸ் மகன் காா்த்திக் என்ற அட்டு காா்த்திக் (23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனா்.


