8 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மேல்மாந்தை பகுதியைச் சோ்ந்த ஸ்ரீனிவாசன் மகன் ராமசாமி (52). இவா் விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 8 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக, கடந்த 2020ஆம் ஆண்டு போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.
இவ்வழக்கு விசாரணை, தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், குற்றம்சாட்டப்பட்ட ராமசாமிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசு தரப்பு வக்கீல் முத்துலட்சுமி ஆஜரானார்..


