தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள நியாய விலை கடையில் தமிழக அரசின் சார்பில் 3000 ரொக்கம் மற்றும் பொங்கல் பொருட்களை மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களுக்கு வழங்கினார்.
அப்போது மேயர் பேசுகையில், “தூத்துக்குடி மாநகர் பகுதியில் தற்போது 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது ஆகையால் வரும் 2026 ஆம் ஆண்டு நீங்கள் எல்லோரும் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன், திமுக நிர்வாகிகள் பிரபாகர், ஜேஸ்பார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


