தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது.
தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. அதன் பின்னர் தொடர்ந்து லேசான சாரல் மழை பெய்தது. கனமழை காரணமாக சாலைகள், தாழ்வான பகுதிளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
இதுபோல் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்தது. மேலும், கடம்பூர் கயத்தார் ,கழுகுமலை, எட்டையபுரம்,விளாத்திகுளம் உட்பட மாவட்ட முழுவதும் பலத்த மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 36 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், எட்டயபுரம், கீழ அரசடி, காடல்குடி ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்தது.


