தூத்துக்குடி முத்தையாபுரத்தில் அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் பணி, தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடந்தது.
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்து தமிழக சட்டமன்ற தொகுதி வாரியாக அந்தந்த மாவட்டங்களில் அதிமுக பூத் கமிட்டி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி அமைக்கும் பணி வாக்குச்சாவடி வாரியாக நடைபெற்று வருகிறது. இதற்கென அதிமுக மாவட்ட வாரியாக மாவட்ட பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதி முத்தையாபுரத்தில் தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளின் 40 வாக்குச் சாவடிகளுக்கு அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் பணி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் முத்தையாபுரம் தங்க பாரதி தியேட்டர் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு பகுதி அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான சுடலைமணி, வட்டச் செயலாளர் எஸ்.கே. மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்து கொண்ட அதிமுக அமைப்புச் செயலாளரும் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான பி.ஜி. ராஜேந்திரன் தெற்கு பகுதிக்கு உட்பட்ட 40 வாக்கு சாவடிகளுக்கான அதிமுக பூத் கமிட்டியை பார்வையிட்டு சரிபார்த்து ஒப்புதல் வழங்கினார். இதன் இறுதி வடிவம் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பார்வைக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிகழ்வில் மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் நகர் மன்ற தலைவர் இரா. ஹென்றி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், முன்னாள் தொகுதி இணைச்செயலாளர் எம்.பெருமாள், எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம், வக்கீல் சரவண பெருமாள், மாநகராட்சி கவுன்சிலர் வெற்றிச்செல்வன், முன்னாள் கவுன்சிலர் தவசி வேல், வட்டச் செயலாளர்கள் மாரிமுத்து, மாடசாமி கண்ணையா, செல்வராஜ், யோவான் மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், உதயகுமார், ஏசுதாஸ், பெத்துராஜ் குமார் மாநகராட்சி கவுன்சிலர் ஜெயலட்சுமி, உள்ளிட்ட பலரும் வாக்குச்சாவடி வாரியாக குழு, குழுவாக கலந்து கொண்டனர்.


