தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாகப் பணம் செலுத்தத் தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ.964/- ஆகவும், கோவில்பட்டியில் ரூ.962.50/- ஆகவும், கழுகுமலையில் ரூ.971/- ஆகவும், கயத்தாரில் ரூ.974/- ஆகவும், எட்டயபுரத்தில் ரூ.962.50/- ஆகவும் மற்றும் சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.981/- எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.964.50/- எனவும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.949./- எனவும், 01.10.2021 முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2 முப) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாகப் பணம் செலுத்தத் தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில் ராஜ், அவர்கள் தெரிவித்துள்ளார்.


