தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள நாணல்காடு கிராமத்தினை சேர்ந்தவர் உமா துரைச்சி. இவர் தென் திருநள்ளாறு என போற்றப்படும் நாணல்காடு சிவன் கோயிலில் பல்வேறு திருப்பணிகளை செய்து வருகிறார். மேலும் கவி எழுதுவதிலும் புலமை பெற்றவர். பல்வேறு சமூக சேவைகளிலும் இவர் ஈடுபட்டு வருகிறார். இதனால் இந்திய சாதனை புத்தகத்தில் அவர் சிறந்த கவிஞர், மற்றும் சிறந்த சமூக சேவகர் என பதிவாகியுள்ளார். இதற்கான விருதும் சான்றிதழும் உமா துரைச்சிக்கு வழங்கப்பட்டது. மேலும் இவர்தெய்வீக பணிக்காக கௌரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். தொடர்ந்து சாதனை புரிநது வரும் உமா துரைச்சி அவர்களை தாமிரபரணி கரை அமைப்புகள் மற்றும் சிவ தொண்டர்கள் பாராட்டி வருகிறார்கள்.
உலக சிவனடியார்கள்
திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பிலே வாழ்த்துகள்!
உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவ.உமாதுரைச்சி அவர்கள் சைவ சமய வளர்ச்சிக்காக *விருதுகள் வழங்கப்பெற்றிருந்த நிலையில்,
தற்போது அம்மாவின் தொண்டுள்ளம் மற்றும் கவிதைகளுக்காக சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த கவிஞர் என்று பாராட்டி உள்ளார்கள் இதன் மூலம் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்
தீராத்தொண்டுள்ளம் கொண்டுள்ள அம்மையாரது புகழ் திக்கெட்டும் பரவி பறை சாற்றிட, உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் மனமகிழ்வில் நிறைவு கொள்கிறது.
சிவ.உமா துரைச்சி அவர்கள் மென்மேலும் தொண்டாற்றி உலகம் உய்ய, சைவசமய வளர்ச்சியில் துரும்பாயாற்றி செம்மையோங்கிசெய்திட திருவருளை வேண்டுகிறோம்.
என்றும் சிவப்பணியில்
உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை


