செய்துங்கநல்லூர் அருகே உள்ள விட்டிலாபுரத்தில் பாண்டுரெங்கர் கோயில் உள்ளது. இந்தகோயில் தென் பண்டரி புரம் என அழைக்கப்படுகிறது. முறப்பநாடு பகுதியில் வாழ்ந்த விட்டலராயன் என்னும் மன்னன் வடநாட்டில் உள்ள பாண்டுரெங்கர் போல இங்கேயும் காட்சி கொடுக்க வேண்டும் என விரும்பவே, அவர் கனவில் தோன்றிய படி தாமிரபரணி ஆற்றில் ஒரு எலுமிச்சை மிதந்து வந்தது. அந்த எலும்மிச்சை முத்தாலங்குறிச்சி நதிக்கரையில் நின்ற போது, அங்கே ஒரு சிலை கிடைத்தது. அதன் பின் கருடன் வட்டமிட்டபடி நாட்டார்குளம் என்ற இடத்தில் மேடான பகுதியை காட்ட அங்கே இந்த சிலையை பிரதிட்சை செய்து மன்னன் வணங்கினார். இவ்வூருக்கு மன்னன் பெயரில் விட்டிலாபுரம் என்றழைக்கப்பட்டது. தென்னகத்து பண்டர் புரம் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் இன்று காலை கும்பாபிசேகம் நடந்தது. இதையொட்டி ஏரளமான வடநாட்டு பக்தர்கள் கூடியிருந்தனர். கிட்டத்தட்டஇந்தியா முழுவதும் இருந்து பாண்டுரெங்கரில் பக்தர்கள் வந்து கூடினார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் இந்து அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் நம்பி மற்றும் அறங்காவலர்கோமதி மற்றும் பாணடுரெங்கர் பக்தசபா செய்திருந்தது.


