விளாத்திகுளம், புதூர் மற்றும் குளத்தூரில் உள்ள மருத்துவமனைகளை தரம் உயர்த்த வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தாலுகா மாநாடு நடைபெற்றது. இதில் தாலுகா தலைவராக கனகராஜ், செயலாளராக அய்யனார், பொருளாளராக சிவராமன், துணைத் தலைவராக கனிஷ்கர், துணைத் செயலாளராக தர்மராஜ் மற்றும் 9 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது.
மாநாட்டில், “விளாத்திகுளம், புதூர் மற்றும் குளத்தூரில் உள்ள மருத்துவமனைகளை தரம் உயர்த்தி மருத்துவர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவும், விளாத்திகுளம், புதூர் மற்றும் குளத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை வசதி, மின்சாரம், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தி தரவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


