தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணியை சுத்தப்படுத்தும் பணியை மருதூர் அணைக்கட்டில் துவக்கி வைக்க கனி மொழி எம்.பி அவர்கள் வருகை தந்திருந்தார்கள். கனிமொழி எம்.பியிடம் முத்தாலங்குறிச்சி காமராசு கீழ்கண்ட கோரிக்கையை வைத்தார. நிறைவேற்றி தருவதாக எம்.பி அவர்கள் வாக்களித்தார்கள்.
அம்மாவிடம் நான் வைத்த கோரிக்கை வருமாறு
1. திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை. இந்த ஊரில் செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரயில்களும் நின்றுசெல்கிறது. இங்கு முன்பதிவு வருமானம் உள்பட போதிய வருமானம் ரயில்வே துறைக்கு வருகிறது. மேலும் இதுவொரு சந்திப்பு நிலையமாகும். ஒரு வழித்தடமான ஆழ்வார்திருநகரியில் இந்த ரயில் நின்றுசெல்கிறது. ஆனால் ஆன்மிக சுற்றுலா தலங்கள் மற்றும் இப்பகுதியை சுற்றி 42 கிராமங்கள் இருக்கும் நிலையில் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லாதது பொதுமக்களுக்கு மிகவும் கஷ்டத்தினை தருகிறது. பழனி உள்பட ஆன்மிக தலத்துக்கு செல்லும் பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகிறார்கள்.
எனவே திருச்செந்தூர் & பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை செய்துங்கநல்லூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
2. 2023 ஆம் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த முறையில் புத்தக கண்காட்சி நடந்து முடிந்தது. அதில் பல்வேறு அறிஞர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து நெய்தல் திருவிழாவும் மிகச்சிறப்பாக நடந்தது. தாங்கள் இந்த ஆண்டும் புத்தக கண்காட்சியை மழை காலத்திற்கு முன்பாக நடத்திட வேண்டுகிறேன்.
3. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்க அடிக்கல் நாட்டி, இந்தியாவில் முதல் முதலில் சைட் மியூசியம் அமைய நடவடிக்கை எடுத்தீர்கள். உங்களின் முயற்சியில் உங்கள் முன்னிலையில் மத்திய நிதி அமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தற்போது அடிக்கல் நாட்டிய அந்த பணி அப்படியே கிடப்பில் கிடக்கிறது. எனவே உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.1. சைட் மியூசியம் மழையில் சேதமடைந்துள்ளது. அதை சீரமைக்க வில்லை. தொடர்ந்து 6 மாத கோரிக்கையில் அந்த பணி அப்படியே கிடப்பில் கிடக்கிறது.
2. இங்கு பணி புரிந்த தற்காலிக பணியாளர்கள் தோட்டக்காரர்கள், இரவு காவலர்கள் பணி நிறுத்தம் செய்யப்பட்டு விட்டார்கள். எனவே புல் தரை காய்ந்து கிடக்கிறது. இங்கே வரும் மக்களுக்கு விளக்கம் சொல்ல யாருமே இல்லை.
3. பி. சைட்டில் தொடர்ந்து மழை வெள்ளத்தில் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இங்கு காட்சிக்கு வைக்கப்பட்ட முழு மனிதன் எலும்பு கூடு எல்லாவற்றையும் தூக்கி சென்று விட்டார்கள். அதை மீண்டும் வைக்க ஆவண செய்ய வேண்டும்.
4. சி சைட்யில் சைட் மியூசியம்அமைக்க 20 சதவீதம்தான் பணி முடிந்துள்ளது. 80 சதவீதம் பணி முடியவில்லை. அப்படியே கிடப்பில் கிடக்கிறது. இதனால் திறந்த குழியில் கால்நடைகள் மற்றும் வருகின்ற மக்கள் விழுந்து விடும் அபாய நிலை உள்ளது.
5. சி. சைட்டில் தொல்லியல் பொருள்கள் பாதுகாப்பு இன்றி இருக்கிறது. மேலும் இங்குள்ள கூரைகள் செட் எளிதில் தீப்பிடிக்கும் வண்ணம் உள்ளது. கடந்த மாதம் பரம்பில் உள்ள புல் தரிசில் தீ பிடித்தது. நல்ல வேளைஅணைத்து விட்டார்கள். இல்லையென்றால் இந்த செட் எரிந்து தளமே தன் நிலையில் இழந்து இருக்கும்.
6. இந்த சைட் மியூசியம் அமைப்பதற்கு என்று ஒதுக்கப்பட்ட பணம் திருப்பி எடுத்துக்கொண்டனர் மத்திய தொல்லியல் துறையினர்- . ஆகவே அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
உங்களின் கனவு திட்டமும், தமிழர்களின் தொன்மையான நாகரீகமும், உலக நாகரீகத்தின் தொட்டில் என இந்தியாவின் பழமையான நாகரீகத்தின காப்பாற்ற தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் முதல் சைட் மியூசியம் கட்டிவிட்டு, அதை பராமரிப்பு இன்றி போட்டு விட்ட செயல் மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.
எனவே தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
4.தாமிரபரணியை சுத்தப்படுத்த தாங்கள் எடுத்த நடவடிக்கைக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதே வேளையில் தமிழகத்திலேயே பாயும் தாமிரபரணி நிரந்தரமாக சுத்தப்படுத்த வேண்டும்.
குறிப்பாக வடக்கே ஒரு நதி, தெற்கே ஒரு நதி சுத்தப்படுத்தப்படும் என சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு பாரத பிரதமர் அறிவித்தார். ஆனால் வடக்கே கங்கையை சுத்தப்படுத்தி, செம்மை படுத்தி விட்டார்கள். ஆனால் தென்னகத்தில் ஓடும் வற்றாத ஜீவ நதியாக தாமிரபரணியை இதுவரை அவர்கள் சுத்தப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கரைகளை மேம்படுத்தி, முள்செடி, அமலை செடிகளை அகற்றி, சாக்கடை கலக்காத நதியாக தாமிரபரணியை மாற்றி விட்டால் , ஒரு உயிருள்ள நதியை காப்பாற்றிய பெருமை நமக்கு கிடைக்கும்.
எனவே தயவு கூர்ந்து தாமிரபரணியை சுத்தப்படுத்த பாராளுமன்றத்தில் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
5.செய்துங்கநல்லூரில் உள்ள பழமையான நூலகத்தில், புதிய நூலக கட்டிடம் தங்களது பாராளுமன்ற உறுப்பினர் நிதி மூலம் கட்டித் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி. அதே போல் மத்திய அரசு திட்டம் மூலம் கூடுதல் கட்டிடம் கட்ட இந்த நூலக்கத்துக்கு சிறப்பு ஒதுக்கீடு வந்துள்ளது. அதை கட்ட பழைய கட்டிடத்தினை இடிக்க வேண்டும் என அதிகாரிகள் கூறி வருகிறார்கள்.
பழைய கட்டிடம் நல்ல நிலையில் தான் உள்ளது. எனவே அந்த கட்டிடத்தினை பழுது பார்த்து, அங்கே அரசு இலவச போட்டி தேர்வுக்க பகுதிநேர வகுப்பு எடுக்க ஏற்பாடு செய்து வருகிறோம். அதே வேளையில் மேலும் எங்கள் வளாகத்துக்குள் நிறைய இடம் இருக்கிறது. அந்த இடத்தில் மத்திய அரசு திட்டம் மூலம் நூலக கூடுதல் கட்டிடத்தினை கட்டித்தர வேண்டுகிறோம்.
மேலும் தாங்கள் மூலம் கட்டப்பட்ட கட்டிடத்தினை திறந்து, அதே நாள் மத்திய அரசு மூலம் தந்த கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டிட வேண்டுகிறோம்.
மனு கொடுத்தவுடன் அதை வாங்கி தனது உதவியாளரிடம் கொடுத்துதார். என்னிடம் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என வாக்களித்தார். அவர்களுக்கு மிக்க நன்றி.-அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு


