புதுடெல்லி நேஷனல் புக் டிரஸ்ட் , நீயூ செஞ்சுரி புத்தக நிறுவனம் பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நூலகத்தோடு இணைந்து 7.06.2022 மற்றும் 8.06.2022 ஆகிய நாட்களில் தேசியப்புத்தகத் திருவிழாவைக் கல்லூரி நூலகத்தில் நடத்துகின்றன. அதன் தொடக்கவிழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு.அப்துல் காதர் தலைமையேற்றுத் திருவிழாவைத் தொடங்கிவைத்தார். கல்லூரி நூலகர் சரவணகுமார் வரவேற்றுப் பேசினார். துணை முதல்வர் டாக்டர் செய்யது முஹம்மது காஜா, கலைப்புல முதன்மையர் முனைவர் எஸ்.முஹம்மது ஹனீப், அறிவியல் புலமுதன்மையர் முனைவர் முஹம்மது ரோஷன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நூல் வெளியீடு
கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் சௌந்தர மகாதேவன் எழுதியுள்ள திருநெல்வேலி நினைவுகள் எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு. அப்துல்காதர் நூலை வெளியிடக் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் எல்.கே.எம்.ஏ.முஹம்மது நவாப் உசேன் அதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். மேனாள் அறிவியல் புல முதன்மையர் முனைவர் கமாலுதீன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் கல்லூரி நூலக அலுவலர் பஷீர் அகமது நன்றி கூறினார். என் சிபிஹெச் நிறுவனமும் கல்லூரி நூலகமும் இணைந்து இப்புத்தகத் திருவிழாவை நடத்துகின்றன. 100 ரூக்கு மேல் நூல்கள் வாங்கும் மாணவ மாணவியருக்குத் தினமும் குலுக்கல் முறைப்படி புத்தகப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.


