தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓட்டுடன்பட்டி கிராமத்தில் பாரத பிரதமரின் 8 ஆண்டுகால சாதனைகள் பற்றியும் மக்களுக்கான நலத்திட்டங்களை பற்றியும் எடுத்துக்கூறி, 8 ஆண்டு கால சாதனை படிவங்கள் பொது மக்களுக்கு வழங்கி தெருமுனை கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் ஹேமமாலினி பால்ராஜ் , மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரபு முன்னிலை வகிக்க ஓட்டப்பிடாரம் தெற்கு ஒன்றிய தலைவர் செல்வின் லக்ஷ்மன் சவான் தலைமை வகிக்க, விவசாய அணி மாவட்ட தலைவர் மருதையா மருத்துவர் பிரிவு மாவட்ட செயலாளர் அமோல் சவான் பிற மொழி பிரிவு மாவட்ட செயலாளர் .ஜீவானந்தம். கருங்குளம் ஒன்றிய தலைவர் நங்கமுத்து, கிராமம் மற்றும் ஊரக வளர்ச்சிப் பிரிவு ஒன்றிய தலைவர் ஓ எஸ் கே முத்து மகளிரணி ஒன்றிய தலைவி பேச்சியம்மாள் , ஒன்றிய செயலாளர்கள் முனியசாமி ,விக்னேஷ் , மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டி , கயத்தாறு கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் நல்லமாரிமுத்து , ஓட்டப்பிடாரம் தெற்கு ஒன்றிய பொருளாளர் செல்வராஜ் , ஒட்டுடன்பட்டி கிளை தலைவர் சதீஸ் , புதுக்குடி கிளை தலைவர் உடையார், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேஷ் ,ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


