நாசரேத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி ஆட்சியின் சாதனைகள் குறித்து அ.தி.மு.க. சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி ஆட்சியின் சாதனைகள் குறித்து அ.தி.மு.க. சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், “திமுக ஆட்சிக்கு வந்த நாள்முதல் இன்று வரையிலும் எதையும் நிறைவேற்றாத நிர்வாக திறனற்ற ஸ்டாலின் ஆட்சி எப்போதும் முடியும் என்பதே மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு நீட் தேர்வு ரத்து என்று மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்ற பல வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட அம்மா பேரவை மற்றும் ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளா் விஜயகுமாா் தலைமையில் ஆழ்வை மேற்கு ஒன்றிய செயலாளா் செம்பூா் ராஜ்நாராயனன் முன்னிலையில் நாசரேத் நகர அ.தி.மு.க. செயலாளா் கிங்ஸ்லி மற்றும் அ.தி.மு.க. வினர் நாசரேத் காமராஜர் பேருந்து நிலையம் தொடங்கி லூக்கா மருத்துவமனை வரை, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, பொதுமக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரனி செயலாளா் ஜீலியட் ரவிசங்கா் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளா் ஞானையா, மாவட்ட இளைஞரணி தலைவா் சரவணன், துணைச் செயலாளா் பொியதுரை, ஆழ்வைஒன்றிய இளைஞரனி செயலாளா் பாலா, மூக்குப்பீறி மேஷாக், பாலசுந்தா், அம்மா பேரவை கந்தன், தினகரன், கிருபா, செல்வகுமாா், செல்வின்.விக்டா்பட்டுதங்கம், பெல்வின், ரவீந்தரன், அா்ஜீன், மாயாண்டி, காா்த்திக், ஞானமுத்து, கென்னடி, சாா்லஸ், நீலம், அரசை கணேசன், தென்திருப்பேரைகாா்த்திக், ஆறுமுகபான்டியன், சிவனேசன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.


