கோவில்பட்டி கி.ரா நினைவரங்கத்தில் இலக்கிய கூட்டம் நடத்துவதற்கு கட்டண தளர்வு வேண்டியும். நினைவரங்க வளாகத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது தொடர்பாக கடந்த வாரம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு கோரிக்கை மனுவை அனுப்பியிருந்தோம்.. இந்த கோரிக்கையை எழுத்தாளர் மற்றும் கி.ரா நினைவரங்க ஆலோசனைக்குழு உறுப்பினர்களான சோ.தர்மன் மற்றும் முத்தாலங்குறிச்சி காமராஜ் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.. இந்த கோரிக்கைகள் தொடர்பாக கடந்தவாரம் தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சிதலைவர் கி.ரா நினைவங்கத்திற்கு கள ஆய்விற்கு வந்து மனுவின் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக உறுதியளித்திருந்தார். இதன் அடிப்படையில் இன்று கோவில்பட்டி கி.ரா நினைவரங்கத்தில் நடைபெற்ற ஆய்வின் போது தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் மாநில குழு உறுப்பினரும் எட்டையபுரம் பாரதி சங்க செயலாளருமான வ.பாலமுருகன் மன்றத்தின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சிதலைவரிடம் பேசினார். இதனடிப்படையில் இலக்கிய கூட்டங்களுக்கான அனுமதியும். நினைவரங்க வளாகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள். இந் நிகழ்வின் போது சாகித்ய அகாடமி கரிசல் எழுத்தாளர் உதயசங்கர் அடிப்படை கோரிக்கைகளை மாவட்ட ஆட்சி தலைவரிடம் வலியுறுத்தினார்.
இந்த கோரிக்கை வெற்றி பெற உறுதுணையாக இருந்த எழுத்தாளர்கள் சோ.தர்மன் மற்றும் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோருக்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் நன்றி .


