நத்தம் விஜயாசன பெருமாள் கோவிலில் பிரமோட்சவ விழாவை முன்னிட்டு புஷ்பாஞ்சலி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நம்மாழ்வாரால் பாடப்பெற்ற திருப்பதிகளில் ஒன்றாகவும், நவதிருப்பதிகளில் இரண்டாவது திருப்பதியாக சந்திரனுக்கு அதிபதியான விஜயாசனப் பெருமாளுக்கு மாசி பிரம்மோற்ச்சவம் கடந்த 24ம் தேதி கொடியேற்றத்தடன் துவங்கியது.
தொடர்ந்து 12 தினங்கள் பிரமோட்ச விழா நடந்தது. தினமும் சுவாமி மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா எழுந்தருளினார். தொடர்ந்து திருவிழாவின் இறுதி நாளான இன்று புஷ்பாஞ்சலி நடந்தது. இதற்காக அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து கோவிலில் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பல்வேறு மலர்களால் புஷ்பாஞ்சலி செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


