தாமிரபரணி கரை நாகரீகத்தினை நிலைநிறுத்த காரணமாக நீதியரசர்கள் தாமிரபரணி கரையில் உள்ளவித்தியாசமான கிறிஸ்தவ சபையை பற்றி ஆராய்வதற்கு முன்பாக இரு ஆளுமைகள் குறித்து நாம் காணலாம். மேற்கு தொடர்ச்சி மலை குளுமையின் கசிவில் உற்பத்தியாகி புன்னைக்காயலில் கலக்கும் ஆறுதான் தாமிரபரணி. இதன் கரையில் உள்ள ஒரு சிற்றூர் கோபால சமுத்திரம். இந்த ஊர்க்காரர்தான் இராமச்சந்திரன். இவர் ஒரு தலைசிறந்த ஆராய்ச்சியாளர். புரதத்தின் வடிவத்தை முதன் முதலில் கண்டறிந்தவர் இவர்தான். மேலும் புரதத்தின் வடிவத்தைகணிக்கும் வழிமுறையை கண்டறிந்தவர். இந்த வழிமுறை இவர் பெயரைக் கொண்டு இராமச்சந்ரா வரைபடம் என அழைக்கப்படுகிறது. இவர் பிறந்த ஊரான கோபாலசமுதிரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலிருந்து குறுக்கு வாட்டில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது. மேலும் திருநெல்வேலி யிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிற்றூர் வத்ராயிருப்பு. வத்ராயிருப்பும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஊர்தான். அந்த ஊருக்கு அருகிலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி பாய்ந்தோடும் பல சிற்றாறுகள் உள்ளது. இந்த ஊரில் பிறந்தார் கிருஷ்ணன். இவர்வேறு யாரும் அல்ல உலகப்புகழ் பெற்ற இராமன் விளைவை கண்டறிந்தவர் . இவரின் வாத்தியார்தான் இராமன். இராமனின் வழிகாட்டலில் ஒளியை ஆராய்ச்சி செய்தவர் தான் கிருஷ்ணன். ஒளியின் பண்பை கணிதநுட்பம் கொண்டு ஒரு சமன்பாட்டை கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்புதான் உலகப்புகழ் பெற்ற nature என்ற பத்திரிகையில் ஒரே பக்கத்தில் வெளியானது. இந்த தினம் தான் நம் நாட்டில் அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஒரு பக்க ஆய்வுக்கட்டுரையில் முதல் இடத்தில் வழிகாட்டியான இராமன் பெயரும் இரண்டாம் இடத்தில் மாணவனான கிருஷ்ணன் பெயர் உள்ளது. இந்த ஆய்வுக்கட்டுரைக்குத்தான் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இராமன் பெயர் பட்டிதொட்டி எங்கும் நாடு முழுக்க பரவியது. கிருஷ்ணன் அதிகம் அறியப்படாதவரானார். பின்பு பட்னாகர் விருது என இந்தியாவில் அறிவியலாளர் களுக்கான உயரிய விருது ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. முதன் முதலில் இந்த விருதை கிருஷ்ணன் வாங்கினார். இந்த விருது இவருக்காகவே தோற்றுவிக் கப்பட்டது எனலாம். கிருஷ்ணன் மற்றும் இராமச்சந்திரன் ஆகிய இருவரும் நோபல் வாங்கவில்லை என்றாலும் நோபலுக்கு இணையான ஆராய்ச்சியாளர்கள்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த இருவருக் கும் பிறந்த ஊருக்கு அருகில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இவர்களுக்கு ஒரு endowment(கொடை) ஆரம்பிப்பது அவசியம். கிருஷ்ணன் மற்றும் இராமச்சந்திரன் கொடையை ஆரம்பிக்க பல்கலைக்கழகத்தில் ரூபாய் ஐந்து லட்சம் வைப்பு நிதியாக கொடுக்க வேண்டும். என பேராசிரியர் சுதாகர் முகநூலில் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கை நாமும் சுந்தரனார் பல்கலைகழகத்திற்கு வைக்க கடமை பட்டுள்ளோம். ஏன் என்றால் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்த இராமசந்திரன் அவர்களை பற்றி நாம் அறியும் போது அவரை பற்றிய ஒரு கொடை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இருக்கிறது என்பதை அறியும் போது மிக சந்தோசமாக இருந்தது. இந்த நிலையில் மிகசந்தோசமான ஒரு நிகழ்வு நடந்தது.இந்த நிகழ்வை பொறுத்தவரை அதில் முக்கியமாக பங்கேற்றவர்கள் நான்தொடுத்த ஆதிச்சநல்லூர் வழக்கில் நீதியரசர்களாக இருந்த சுந்தர், தாரிணி அவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு. எனவே அந்த நிகழ்வில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நான் கலந்துகொண்டேன். தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் புதிதாக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2 தொடக்க விழா இன்று மாலை நடந்தது. பழைய நீதிமன்றம் முன்புள்ள கட்டிடத்தில் இந்த தொடக்கவிழா 4.03.2020 ல் நடந்தது.இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கோவிந்தராஜ்,சுந்தர், தாரணி மற்றும் இளந்திரையன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி நீதிமன்றத் தினை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றப்பட்டது. அதன் பின்னர் நீதிபதிகள் பழைய நீதிமன்ற கட்டிடத்தினை பார்வையிட்டனர். அவர்களுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் நீதிமன்ற தொடக்க விழா நடந்தது. கலந்து கொண்ட நீதிபதிகளை ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.அதன் பின்னர் நீதிபதி தாரணி பேசுகையில், ஒரு பெயில் எடுக்கும் மனுவிற்கு மல்லையாவிற்கும் சரி, மாடசாமிக்கும் சரி ஒரே சட்டம் தான். ஆனால் கட்டணம் வாங்குவது ஒன்று போல் இல்லை. இதுபோன்ற தன்மை வேறு எந்த தொழிலிலும் கிடையாது. மாடசாமியை மனதில் வைத்து அவருக்கு குறைவான கட்டணமும், மல்லையாவிற்கு ஏற்றவாறு கட்டணமும் வசூலிப்போம். இது போன்ற நிலைமை வழக்கறிஞர் தொழிலுக்கு மட்டுமே உண்டானது. வழக்கறிஞர்கள் செய்யும் ஒரு சில விஷயங்களில் குறைபாடுகள் உள்ளது. வாகனங்களில் வழக்கறிஞர் என்ற ஸ்டிக்கர் ஒட்டினால் போதும் என்ற மனநிலையில் பலர் உள்ளனர். வாகனங்களுக்கு சரியான பேப்பரை வைத்துக் கொள்வதில்லை. இது பொதுமக்கள் மத்தியில் சற்று வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கும் போது முதலில் வழக்கில் சம்பந்தப்பட்டவர் வருகிறார். தொடர்ந்து அவரின் வாரிசு வருகிறார். அதனை தொடர்ந்து வாரிசின் வாரிசு வருகிறார். ஆனால் வழக்கு முடிவில்லாமல் செல்கிறது. அந்த நிலை மாற வேண்டும். 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் வழக்கை முடிக்க வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும். வாய்தா வாங்க கூடாது. இல்லை என்றால் அவர்கள் அரசியல் வாதிகளையும், ரவுடிகளையும் தேடிச் செல்லும் அலவ நிலை உள்ளது. அதனை மாற்ற வழக்கறிஞர்கள் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். வழக்கு நடத்துவது மட்டும் வழக்கறிஞரின் பணி இல்லை. அதற்கு தீர்வு கண்டு கொடுப்பதே ஒரு வழக்கறிஞரின் கடமை ஆகும் என்று தெரிவித்தார்.நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேசுகையில், இந்த ஸ்ரீவைகுண்டம் பகுதி மிகவும் பழமையான பகுதி இந்த பகுதியில் தான் ஆதிச்சநல்லூர் உள்ளது. மேலும் இந்த ஆதிச்சநல்லூரில் 2004 ல் நடந்த அகழாய்வின் அறிக்கையில் பலவிதமான வரலாற்றுத் தகவல்கள் வந்துள்ளது என்று தெரிவித்தார். மதுரை உயர்நீதிமன்றத்தில் நான் தொடுத்த ஆதிச்சநல்லூர் வழக்கை நன்கு விசாரித்து நல்ல தீர்ப்பை தந்து இன்று ஆதிச்சநல்லூரில் உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கவும், சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூரில் தொடர்ந்து அகழாய்வு நடக்கவும் காரணமாக நீதியரசர் கிருபாகரன் அய்யாவோடு இணைந்து பணியாற்றிய நீதியரசர்கள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் தாரிணி ஆகியோரை நான் ஸ்ரீவைகுண்டம் சந்தித்து நன்றி தெரிவித்தேன். அருகில் நீதியரசர்கள் கோவிந்தராஜ், இளந்திரையன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சிதலைவர் செந்தில் ராஜ்,எனது நண்பர்கள் செய்தியாளர்கள்- உள்பட பலர் கலந்துகொண்டோம். தொடர்ந்து தாமிரபரணி கரை தகவல்களோடு சந்திப்போம்.
(நதி வற்றாமல் ஓடும்)


