இந்திய துணைக் கண்டத்தின் பண்டைய நிலத்தில், தற்காப்புக் கலையின் ஒரு அமைப்பு களரி அடிமுறை. தமிழர்களி பராம்பரி கலையான இந்த கலை சுமார் 2500 ஆண்டுகளுககு முன்பு உருவானது. நமது தமிழகத்தின் துறவிகள் மற்றும் முன்னோர்கள் முழுமையான நல்வாழ்வுக்கான சிறந்த பொக்கிஷமான களரி அடிமுறையை நமக்கு அளித்துள்ளனர். இந்த கலை மூலமாக ஆற்றல், நரம்புத்தசை ஒருங்கிணைப்பு மற்றும் உடல் சக்தி ஆகியவற்றின் மேம் படுத்த உருவானதாகும். அனைத்து தற்காப்புக் கலைகளுக்கும் தாயாகிய களரி அடிமுறையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல உருவாககப்பட்டது தான் உலக களரி கூட்டமைப்பாகும். இந்த நிறுவனராக அமெரிகக தமிழர் ரமேஷ் ரத்தின குமார் உள்ளார்.
கொரோனா தொற்றுநோய் காலத்தின் போது உலக களரி அடிமுறை கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த தொற்றுநோய் உலகை ஆட்டி வைத்தது. மனித உடல், மனம் மற்றும் அடிப்படை இறையாண்மையை மீட்டெடுக்க களரி அடிமுறை உலக கூட்டமைப்பு புதிய முயற்சியை எடுத்தது. இதனால் ஆன் லைன் மூலம் உலக நாடுகளில் உள்ளவர்களுக்கு களரியை கற்றுக்கொடுத்தது.
களரி அடிமுறையின் உலகக் கூட்டமைப்பு, உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆர்வலர்கள் களரி அடிமுறையில் சிறந்து விளங்குவதற்கும், அதைக் கற்றுக்கொள்வதற்கும் உதவ ஏற்பாடு செய்தது.
இதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நார்வே, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, லக்சம்பர்க், கானா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற கிட்டத்தட்ட 18 நாடுகளில் களரி அடிமுறை உலகக் கூட்டமைப்பு தனது சிறகுகளை விரிவுபடுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் 1500 க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களை பதிவு செய்துள்ளது.
இது குறித்து களிரி அடிமுறை உலக கூட்டமைப்பு நிறுவனர் முனைவர்ரமேஷ் ரத்தின குமார் கூறும் போது, “நாங்கள் செய்வது உண்மையிலேயே சமூகத்திற்கு ஒரு தன்னலமற்ற சேவை என்று சொல்வதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அதோடு மட்டுமல்லாமல் வருடந்தோறும் உலக களரி அடிமுறை கூட்டமைப்பு சார்பில் உலக சாம்பியன் ஷிப்-ற்கான விளையாட்டை விளையாடுகிறோம். தற்போது பிப்ரவரி 4,5 ஆகிய நாள்களில் இந்த விளையாட்டு ஆன் லைன் மூலமாக நடந்தது. வருகிற பிப்ரவரி 18,19 ஆகிய நாள்களில் உலக அளவிலான களரி விளையாட்டு ஆன் லைன் மூலம் மீண்டும் நடக்க வுள்ளது. 14 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் 6 வயது முதல் 50 வயது வரையிலும் வெவ்வேறு வயதுப் பிரிவுகளில் 350 பதக்கங்களுக்காக நடைபெறுகிறது. என்று அவர் கூறினார்.
உலக களரி கூட்டமைப்பு தற்போது தமிழர்களின் களரி கலையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. அதில் ஒரு கட்டமாக களப்பணி செய்து தமிழ் நூல்களை உலக தரத்தில் உருவாக்குவதாகும். அந்த வகையில் களரி அடிமுறை பாகம் 1 என்ற நூலை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதியுள்ளார். உலக தரத்தில் வண்ணத்தில் உருவான இந்த நூல் கடந்த மாதம் சென்னை புத்தக கண்காட்சியை யட்டி வெளியானது. தொடர்ந்து ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் இந்த நூல் மொழி பெயர்ப்பு செய்யப்படவுள்ளது.
ஆதிதமிழர்களின் கலையான களரி அடிமுறையை உலக அளவில் கொண்டு செல்லும் உலக களரி கூட்டமைப்பை தமிழக மக்கள் பாராட்டி வருகிறார்கள்.


