நாம் தமிழர் கட்சி சார்பாக செய்துங்கநல்லூரில் அம்பேத்கர் 66வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பஜாரில் நாம் தமிழர் கட்சியின் கருங்குளம் தெற்கு ஒன்றியம் சார்பாக அம்பேத்கர் 66வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் அருண் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சந்தனராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் ஆதிநாராயணன், தொகுதி இணைச்செயலாளர் செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருங்குளம் தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் மணி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் லெட்சுமணன், உதயகுமார், சந்துரு, கோவில்பத்து கணேசன், பேச்சியம்மாள், பூவம்மாள், மூத்த உறுப்பினர் காசிலிங்கம், பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


