கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி நிறைவு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2ஆம் தேதி தொடங்கி இன்று வரை நடந்தது. இந்த போட்டியில் கிள்ளிகுளம், குடுமியான்மலை, செட்டிநாடு, கலவை, வாசுதேவநல்லூர், காரைக்குடி, ராமநாதபுரம், ராதாபுரம், புதுக்கோட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 10 வேளாண் கல்லூரிகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இதன் நிறைவு விழா இன்று கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உள் அரங்கத்தில் நடந்தது.
கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர் தேரடிமணி தலைமை வகித்தார். விழாவில் மாணவர் மன்ற ஆலோசகர் முனைவர் ஸ்ரீனிவாசன் போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை வரவேற்று பேசினார். தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் தேரடி மணி விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
தனித்திறன் தடகளப் போட்டியில் மாணவர் பிரிவில் வாசுதேவநல்லூர் தங்கப்பழம் வேளாண் கல்லூரி மாணவர் தினேஷ் ராகுல் மற்றும் மாணவியர் பிரிவில் காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண் கல்லூரி மாணவி திரிஷா பாஸ்கரன் கோப்பையை வென்றனர்.


