சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் பலர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், தூத்துக்குடி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக மாவட்ட செயலாளர் டிவிஏ பிரைட்டர் தலைமையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து காெண்டனர்.


