தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி புதுமனை தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவருக்கு இரண்டு ஆண் மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் முதல் மகன் பூமிகாலபெருமாள் (23). இவர் படிப்பை முடித்துவிட்டு தற்போது கொத்தனார் வேலைக்கு சென்று வருகிறார்.
கடந்த இரண்டு தினங்களாக பூமிகாலபெருமாள் மிகவும் சோர்வாக காணப்பட்டார். வீட்டில் யாரிடமும் அதிகமாக பேசுவதில்லை. இந்த நிலையில் நேற்று அவர் வேலைக்கு செல்லவில்லை. அவரது தாய் மற்றும் தந்தை வேலைக்கு சென்று விட்டனர்.
நேற்று மாலை தந்தை காமராஜ் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பி வந்து பார்த்தபோது மகன் பூமிக்கால பெருமாள் வீட்டில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் பூமிகாலபெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து விசாரணை கொண்டு வருகின்றனர்.


