குலசேகரன்பட்டினம் தசார திருவிழா நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் வட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா முன்னிட்டு மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் அவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் அவர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் ஆகியோர் இன்று தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா முன்னிட்டு மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா என்பது தென் மாவட்டத்தில் உள்ள மக்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படும் திருவிழாவாகும். இந்த ஆண்டும் திருவிழா இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற உள்ளது.
அதற்கான மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொண்டு உள்ளோம். குறிப்பாக பக்தர்களின் பாதுகாப்பு, பக்தர்கள் வரும் வழி, வெளியேறும் வழி மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தற்காலிக பேருந்து நிலையம், வாகன நிற்கும் இடம், கடற்கரைப் பகுதி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.
மேலும், அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம்.
திருவிழா நடைபெறுவதற்கு முன் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிவர்த்தி செய்து சிறப்பான முறையில் திருவிழா நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் அவர்கள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் அவர்கள் ஆகியோர் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.சரவணன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கௌதம், இணை ஆணையாளர்கள்
தி.சு.ரோஜா லி சுமதா, அருணாச்சலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபு மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


