
தெய்வசெயல்புரம் கிராம விவசாயிகள் பெயரில் பட்டா கேட்டு ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் இன்றைய தினம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட மத்தியகுழு உறுப்பினர் வாசுகி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், பேச்சிமுத்து மாவட்டக்குழு உறுப்பினர்கள் மாரியப்பன், நம்பிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலத்துக்கு சம்பந்தப்பட்ட விவசாயிகள் ஸ்ரீவைகுண்டம் தலைமையிடத்து துணை தாசில்தார் ரகுபதிராஜாவிடம் பட்டா தொடர்பான விவர மனுக்களை வழங்கினர்.
இதுகுறித்து அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்திற்கு உட்பட்ட தெய்வசெயல்புரம் வருவாய் கிராமத்தில் விவசாயிகளுக்கு பாத்தியப்பட்ட 915 நிலத்துக்கு விவசாயிகள் பெயரில் தனித்தனியாக பட்டா வழங்க படாமல் இருந்து வருகிறது.
இதை 915ஏக்கர் நிலங்களும் 230 குடும்பங்களுக்கு குறுகிய கால விவசாயமான மானவாரி விவசாயம் செய்கிறார்கள். இதை குடும்பங்களுக்கு வாழ்வளிக்கும் நிலமாக உள்ளது. பலதலை முறையாக ஒருவருக்கு ஒருவர் விற்பனை செய்து விலைக்கு வாங்கியும் கிரைய ஆவணம் மூலம் பாத்திய படுத்தி கொண்டனர். முறையாக நில தீர்வையும் செலுத்தியுள்ளார்கள். ஆனால் வருவாய் துறை நிலஅளவிடு செய்து சம்பந்தப்பட்ட விவசாயிகள் பெயரில் பட்டா வழங்கப்படவில்லை. இதனால் நிலமோசடி கும்பல்களுக்கு மோசடி செய்வதுக்கு வாய்ப்பாக உள்ளது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், ராமசுப்பு, பெருமாள், முருகன், ராமசாமி, வரதராஜபெருமாள், சரஸ்வதி அம்மாள், சீதா லெட்சுமி, பொட்டாலூரணி செந்தட்டயாபிள்ளை, கணபதி நாயக்கர், கற்குணமுடையான் வெங்கடேஷ், முத்தம்மாள் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.