திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வளர்பிறை முகூர்த்தத்தையொட்டி ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், நேற்று வளர்பிறை முகூர்த்தம் என்பதால் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற்றன. இதனால் கோயில் வளாகமே திருமண வீட்டார்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.


