தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் தேசிய மீன்வளர்ப்போர் தினத்தை முன்னிட்டு வினாடி வினா போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் ஒரு அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய மீன்வளர்ப்போர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி 11.07.2022 அன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், மீன் வளர்ப்போர், மீன் வணிகம் செய்வோர் மற்றும் மீனவ சமூதாய மக்களுக்கு “மீன் வளர்பபில் இந்தியாவின் தற்போதைய நிலை” என்ற தலைப்பில் உரையும் மற்றும் மீன்வளம் சார்ந்த வினாடி வினா போட்டியும் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எந்த வித கட்டணமும் செலுத்த பட தேவையில்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நபர்கள் அனைவரும் 10.07.2022 மாலை 5.00 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பேராசிரியர் மற்றும் தலைவர்,
மீன் வளர்ப்பு துறை,
மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தூத்துக்குடி – 628 008
அலை பேசி எண் (09442288850)
மின் அஞ்சல்: athithan@tnfu.ac.in


