தூத்துக்குடியில் கலைஞர் பிறந்த நாள் விழாவில் பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம் – முத்தையாபுரம் பகுதி திமுக சார்பில் ஊரணி ஒத்த வீடு, காதர் மீரான் நகர், கோவில் பிள்ளைநகர், முத்து நகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, பகுதி செயலாளர் மேகநாதன், வட்டச் செயலாளர்கள் செல்வராஜ், நடேசன் டேனியல், மனோகரன், பிரசாந்த், சக்திவேல், பக்கிள்துரை, சந்தனராஜ், மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் முருகராஜ், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சின்னதுரை, மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராபின் அசோகன், பகுதி இளைஞரணி அமைப்பாளர் செந்தூர் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


