திருநெல்வேலி மின் விநியோகம் நகர்புறம் செயற்பொறியாளர் முத்துக்குட்டி மக்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது.
பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் வருகிற 8 ந்தேதி புதன்கிழமை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மேலும் மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின் பாதையை பராமரிக்க ஒத்துழைப்பு நல்கும் படி பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மின் தடை ஏற்படும் பகுதிகள் கட்டபொம்மன் நகர், வி.ஓ.சி நகர், வி.மு. சத்திரம், சீனிவாசகம் நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரகுமத் நகர், சாந்திநகர், கான்சாபுரம் , திருமலை கொழுந்து புரம், மணப்படை வீடு, கீழநத்தம் ஆகிய பகுதியில் மின்சாரம் இருக்காது. என தெரிவிக்கப்படுகிறது.


