நெல்லை மாவட்ட ஸ்டார் திருமண மஹாலில் இன்று [06.03.2022] பாப்பாக்குடி கவிஞர் செல்வமணியின் ஒரு வரவேற்பறையில் வாக்குமுலம் நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது.நெல்லை மாவட்ட திமுக இலக்கிய அணித் தலைவர் குமார சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.சுத்தமல்லி திருவள்ளுவர் கழக தலைவர் செக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.கவிஞர் தாணப்பன் வரவேற்புரையாற்றினார். ஒரு வரவேற்பறையில் வாக்குமுலம் நூலினை எழுத்தாளர் சாகித்ய அகாடமி விருதாளர் வண்ணதாசன் சிறப்புரையாற்றினார்.திரைப்படத் தயாரிப்பாளர் வசந்த் நூலினை பெற்று மகிழ்ந்தார்.மேலும் இந்நூலை திரனாய்வு செய்தவர் வள்ளிநாயகம். லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் மரிய சூசை, எழுத்தாளர் நாறும்பூநாதன், இலக்கிய வட்டம் புரவலர் தளவாய் இரா. நாதன், மருத்துவர் இளங்கோவன் செல்லப்பா, அரசு மேல்நிலைப்பள்ளி, சுத்தமல்லி தலைமையாசிரியர் கோமதி நாயகம், முதுகுளத்தூர் அரசு கலை கல்லூரி முதல்வர் முனைவர் மீனாட்சி பாரதியார் உலக பொது சேவை நிதியம் செயலாளர் கோ கணபதி சுப்பிரமணியன் தாமிரபரணி இலக்கிய மன்ற தலைவர் பாமணி திருநெல்வேலி திருவள்ளுவர் பேரவை அமைப்பாளர் ஜெயபாலன் காணிநிலம் இலக்கிய இதழ் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ரமணி முருகேஷ் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வாசுகி வளர்தமிழ் மன்றம் தலைவர் உக்கிரன்கோட்டை மணி தேசிய வாசிப்பு இயக்க தலைவர் தம்பான் நல் நூலகர் முத்துகிருஷ்ணன் தமிழ்ச்சோலை ஆசிரியர் முரசொலி முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியரும் நூலாசிரியர் கவிஞர் பாப்பாகுடி இரா செல்வமணி ஏற்புரை வழங்கினார் நெல்லை குமார் கபிலன் இலக்கிய அறக்கட்டளை புன்னகை செழியன் நன்றி கூறினார் கவிஞர் சக்தி வேலாயுதம் பிரபு ஆகியோர் விழா விழாவை தொகுத்து வழங்கினார்.