அரசுத்துறை பணியாளர்களுக்கான மாநில அளவிலான பேட்மிண்டன், கூடைப்பந்து மற்றும் கேரம் தேர்வு போட்டிகள் நடைபெற உள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.அரசு பணியாளர்களுக்கான மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி 15.02.2026 முதல் 21.02.2026 வரை கோவாவில் வைத்தும், கூடைப்பந்து போட்டி 17.02.2026 முதல் 23.02.2026 வரை, ஆனந்த்வாஸ், கூடைப்பந்து மையம், பால் பாரதி பப்ளிக் பள்ளி, நியூடில்லியில் வைத்தும் மற்றும் கேரம் போட்டி 17.02.2026 முதல் 24.02.2026 வரை தியாகராஜ் விளையாட்டு அரங்கம், ஐ.என்.ஏ., நியூடெல்லியில் வைத்தும் நடைபெற உள்ளது.
மேற்கண்ட போட்டியில் தமிழ்நாடு அணி கலந்து கொள்வதற்காக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, மாநில அளவிலான பேட்மிண்டன் தேர்வு போட்டி 06.02.2026 அன்று காலை 8.00 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் வைத்தும், கூடைப்பந்து போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கத்தில் வைத்தும், கேரம் போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் வைத்தும், 07.02.2026 அன்று காலை 8.00 மணிக்கு நடைபெற உள்ளது.
மாநில அளவிலான தேர்வு போட்டியில் கலந்து கொள்பவர்கள் தினப்படி/பயணப்படி வழங்கப்படமாட்டாது. மேற்கண்ட போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு துறைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


