தமிழ்நாடு வனத்துறை தூத்துக்குடி வனக்கோட்டம், மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகம் சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் ஆழ்வார்தோப்பில் நடந்தது.
இந்த முகாமிற்கு, மாடல் தாமிரபரணி ஒருங்கிணைப்பாளரும், அரசின் விருதுபெற்ற எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சிகாமராசு தலைமை வகித்தார்.
கிராம உதயம் நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். தனியார் பர்னிச்சர் நிறுவன மேலாளர் சரண்குமார் குறுகியகால மரம் சாகுபடி குறித்து எடுத்துரைத்தார்.
முகாமில், தூத்துக்குடி மாவட்ட வனஅலுவலர் இளையராஜா கலந்துகொண்டு மகளிர் குழுவினர்கள், விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கி பேசினார்.
முகாமில், உதவி வனவர் பழனி, கிராம உதய பகுதி பொறுப்பாளர்கள் கண்ணன், பிரேமா, ஆரியநாச்சியார், முத்துசெல்வன், லிஜியா, ஆறுமுகவடிவு, ஆனந்தசெல்வன், விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். தன்னார்வ தொண்டர் செல்வன்துரை நன்றி கூறினார்.


