ஆழ்வார்திருநகரி அருகே ஆடு திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை, அருகேயுள்ள மார்த்தாண்டம் பிள்ளை விளையைச் சேர்ந்தவர் நட்டார் மகன் கொடி (56). இவர் ஆடு வளர்த்து வருகிறார். நேற்று மர்ம ஆசாமி அந்த ஆட்டை திருட முயன்றுள்ளார். இதையடுத்து கொடி, அந்த நபரை கையும் களவுமாக பிடித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தி ஆடு திருடிய நளன்குடி, இசக்கியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தங்கபாண்டி மகன் விஸ்வ கணேசன் (33) என்பவரை கைது செய்தனர்.


