கோரம்பள்ளம் ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கிராம மக்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், “கோரம்பள்ளம் ஊராட்சியில் ராஜபாண்டி நகர், பெரியநாயகபுரம், அந்தோணியார்புரம், ராஜபாண்டி நகர், ஸ்ரீநிநகர், சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகள் உள்ள. இங்குள்ள வாழ்வாதாரம் விவசாயம்,கூலி வேலை மற்றும் மகாத்மா காந்தி நூறு நாள் வேலை மட்டுமே.
கோரம்பள்ளம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் ஊரக வேலைத்திட்டம் பறிபோகும். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். குடிநீர் கட்டணம், வீட்டுவரி கட்டணம் பலமடங்கு அதிகரிக்கும். எனவே வறுமை கோட்டிற்கு கீழ் அதிகம் வசிக்கும் பஞ்சாயத்து மக்களின் நலன் கருதி கோராம்பள்ளம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்


