தூத்துக்குடியில் நாளை (ஜன.7) மினி மராத்தான் போட்டி நடைபெற உள்ளது.
தூத்துக்குடியில் கே.சின்னத்துரை & கோ, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, சத்யா குரூப்ஸ், சைன் யோகா பவர் மற்றும் தமிழன்டா இயக்கம் கலைக்குழு கலைக்கூடம், இணைந்து நடத்தும் மினி மாரத்தான் போட்டி நாளை (ஜன.7) காலை 6:00 மணிக்கு தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு தொடங்குகிறது.
மாரத்தான் ஓட்டத்தை மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழண்டா விருது சான்றிதழ் போன்றவை வழங்கி கௌரவிக்கப்படுகின்றது


