முத்தாலங்குறிச்சியில் உள்ள மிகவும் பழமையான கோயில் லெட்சுமி நரசிம்மர் கோயில். இந்த கோயிலில் நீண்ட காலமாக பூஜை வழிபாடு இன்றி கிடந்தது. தற்போது முத்தாலங்குறிச்சி லெட்சுமி நரசிம்மர் கைகர்யா சபா ஏற்படுத்தப்பட்டு மாதந்தோறும் சுவாதி திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை நடை திற்க்கபட்டது. இங்குள்ள ராமவிநாயகர், சிவன், சக்தி, பைரவர், மற்றும் தெய்வங்களுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. தனிச்சன்னதியில் உள்ள லெட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு கும்பஅபிசேகம், அலங்காரம் மற்றும் நீராஞ்சனம் நடந்தது. இந்த பூஜையில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பூஜை சபாவின் தலைவர் சோமசுந்தரம், சேசப்பன், அர்ச்சகர் பத்பநாபன் சாமி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.


