தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் சார்பில் 2400 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நகர் முழுதும் சுமார் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் தனது சொந்த செலவில் மக்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகை சாமான்கள் போர்வை வழங்கி வருகிறார்.
இதில் தூத்துக்குடி 40-வது வார்டுக்கு உட்பட்ட மாதா கோயில் பகுதி, மரக்குடி தெரு, காந்திநகர் காரப்பேட்டை பகுதி,கிரேட்காட்டன் ரோடு, வளைவு ரோடு, தெற்கு காட்டன் ரோடு, ஜார்ஜ் ரோடு, மற்றும் அதனை சுற்றியுள்ள தெற்களில் உள்ள 2400 குடும்பங்களுக்கு மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் மகிழ் ஜீவன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர் ஜெ.ரிக்டா, வார்டு உறுப்பினர் ஆர்தர் மச்சாது உள்பட பலர் கலந்து கொண்டனர்.


