செய்துங்கநல்லூர் பீமா அம்மா&மாகீன் அபுபககர் ஒலியுல்லாக்களின்81 ஆம் ஆண்டு கந்தூரி விழா கொண்டாடப்பட்டது. இதையட்டி பீமாதைக்காவில் மாலை மக்ரீபு தொழுகை நடந்தது. அதன் பிறகு அரண்மனை கொடி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் செய்துங்கநல்லூரில் உள்ள புதுதெரு உள்பட பல தெருக்களை சுற்றி வந்து மீண்டும் பீமா தைக்காவை அடைந்தது. அதன் பின் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கோயிலில் விளக்கு ராத்திரி யும் திக்ரு மஜ்லீஸ் தொழுகையும் நடந்தது. முகைதீன் ஜாமியா பள்ளி வாசல் இமாம் அசன் ஞானியார் பைஜி, திருநெல்வேலி சந்திப்பு எம்.என்.எச் இமாம் சேக் அப்துல் காதிர் உஸ்மானி, திட்டு விளை இமாம் சேக் அசன் அலியார், அரக்கோணம் மஸ்திதே முபாரக்இமாம் முகம்மது ராபி ரஷிதி ஆகியோர் திக்ரு மஜ்லீஸை நடத்தினார்கள். மறு நாள் நேர்ச்சை எனும் தப்ரூக் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பீமா தர்க்கா விழா குழு பொறுப்பாளர் மற்றும் செயலாளர் கே.எஸ்.புகாரி தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர். விழாவை யட்டி மத நல்லிணக்கத்திற்காக பல்வேறு சமுதாயத்தினர் கௌரவிக்கப்பட்டனர்.


