திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த மிகத் தொன்மையான இடங்கள், தொல்லியல் தடங்களைத் தொகுத்து அவ்விடங்கள் குறித்த வண்ணப் படங்களோடு அவற்றின் விளக்க வரிகளோடு வித்யாசமான நாட்காட்டியை உருவாக்கியுள்ளது. அதன் வெளியீட்டு விழா 5.1.2023 வியாழன் பிற்பகல் 3 மணிக்குத் துணைவேந்தர் அறையில் நடைபெற்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் என்.சந்திரசேகர் பல்கலைக்கழகத்தின் 2023 ஆம் ஆண்டின் நாட்காட்டியை வெளியிடப் பதிவாளர் டாக்டர் ஜி. அண்ணாதுரை அதன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
பாபநாசம் கல்யாண தீர்த்தம், மருதூர் தாமிரபரணி அணை, கொற்கை அகழ்வாய்வில் கிடைத்த ஒன்பது அடுக்குகள் கொண்ட வடிகட்டி, 3600 ஆண்டுகள் பழமையான ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகள். திருமூலக்கரை வட்டக்கல் ஈமத்தாழிகள், சிவகளை அகழாய்வுக்களம், உழக்குடி நடுகல், 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட மறுகால்தலை தமிழி,520 ஆண்டுகளுக்கு முற்பட்ட. மருதூர் அணை, பாளையங்கோட்டை மேலவாசல் கோட்டை, பனிமய மாதா பேராலயம், கிளாரிந்தா பேராலயம், கன்னியாகுமரி தக்கலை பீர்முகமது அப்பா தர்க்கா,250 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருநெல்வேலி மாநகரம் வளைவு நுழைவாயில் , கன்னியாகுமரி உதயகிரிக்கோட்டை, 360 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வட்டக் கோட்டை, குற்றாலம், சித்திரசபையில் மூலிகைச் சாற்றில் வரையப்பட்ட சுவரோவியம், 450 ஆண்டுகளுக்கு முன்னர் மூலிகைச் சாற்றில் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர்’ திருக்கோவில் கோபுரத்தில் வரையப்பட்ட அழகோவியம், 1200 ஆண்டுகளுக்கு முன் கழுகுமலையில் விழி வடிவில் செதுக்கப்பட்ட சிறுகுளம், 450 ஆண்டுகளுக்கு முற்பட்ட கிருஷ்ணாபுரம் கற்சிற்பங்கள், சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில், பத்மநாபபுர அரண்மனை ஆகியவற்றின் படங்களோடு அவை பற்றிய தமிழிலும் ஆங்கிலத்திலும் அமைந்த குறிப்புகளோடு தொல்லியல் மற்றும் பண்பாட்டு மானுடவியல் ஆய்வுகளை முன்னெடுத்த ம.சு.பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் தொ. பரமசிவன் படத்தோடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 2023 ஆம் ஆண்டின் நாட்காட்டி உருவாகியுள்ளது. பல்கலைக்கழக நாட்காட்டிக்குப் படங்கள் எடுத்து தந்த நூலாசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு, செய்தியாளர் சுடலைமணி, நிழற்படக்கலைஞர் லெட்சுமி அருண், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் சௌந்தர மகாதேவன், உயிர்த்தொழில்நுட்பத்துறைப் பேராசிரியர் டாக்டர் சுதாகர் சிவசுப்பிரமணியம், அத்துறை மாணவர் ஜான் சிங், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் இராமசுப்ரமணியன், பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்பத்துறை மாணவர் அபீஷ் விக்னேஷ் ஆகியோரின் பங்களிப்பைப் பாராட்டி மனேன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் என் சந்திரசேகர் பாராட்டுக் கடிதத்தையும் பல்கலைக் கழக நாட்காட்டியையும் வழங்கிப் பாராட்டினார்.


