வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தூத்துக்குடி, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மதியத்திற்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இதற்கிடையில் இன்று மாலை 4 மணிக்கு மேல் திடிரென்று க மழை பெய்தது. தொடர்ந்து பெய்த இந்த மழை சுமார் 2 மணி நேரம் வெளுத்து வாங்கியது. இந்த மழை ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப்பகுதிகளான செய்துங்கநல்லூர், கருங்குளம், நாட்டார்குளம் உள்பட பல பகுதிகளில் பெய்தது. இதனால் திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.


