மாப்பிள்ளையூரணி, தெற்கு சிலுக்கன்பட்டி மற்றும் கீழத்தட்டப்பாறை ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாப்பிள்ளையூரணி, தெற்கு சிலுக்கன்பட்டி மற்றும் கீழத்தட்டப்பாறை ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் ஆட்சியர் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்கள் வாயிலாக பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியான மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஜோதிபாஸ் நகரில் உள்ள 298 குடியிருப்புகளில், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.26.20 இலட்சம் மதிப்பீட்டில் 233 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, மீதமுள்ள 65 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதையும்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.10.98 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மையக் கட்டிடப் பணிகளையும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.370.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 56 குடியிருப்புகளையும், கூடுதலாக ரூ.31 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 04 குடியிருப்பு கட்டுமானப் பணிகளையும், மேலும், 16 குடியிருப்புகள் கட்டுவதற்கு அனுமதி பெறப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதனைத்தொடர்ந்து, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அருகில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ.52 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 528 குடியிருப்புகள் கட்டும் பணிகளையும்,
கோமஸ்புரத்தில் ரூ.186.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் மின்தகன மேடை கட்டுமானப் பணிகளையும், தெற்கு சிலுக்கன்பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டும் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின்கீழ் ரூ.12.61 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டிடத்தினையும்,
கீழத்தட்டப்பாறை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.27.15 இலட்சம் கட்டப்பட்டுவரும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தினையும், குழந்தைகள் நேய உட்கட்டமைப்புத் திட்டத்தின்கீழ் ரூ.27.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, திட்டப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் உரிய காலகட்டத்தில் நிறைவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) வீரபுத்திரன், செயற்பொறியாளர் (வளர்ச்சி) பிரேம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, உதவி செயற்பொறியாளர் ஜாக்லின் அமலா, உதவிப் பொறியாளர்கள் ரவி, பிரான்சிஸ்கா, அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


